Pages

Tuesday 7 June, 2011

உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய சமச்சீர் கல்விக்கு சட்டமன்றத்தில் தடை விதிக்கலாமா?


சமச்சீர் கல்வி திருத்த மசோதா நிறைவேற்றம் : எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு!



சென்னை : சட்டசபையில் சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. இதன்மீது காரசார விவாதம் நடந்தது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சமச்சீர் கல்வி முறை பாடத்திட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு: மு.க.ஸ்டாலின் (சட்டசபை திமுக தலைவர்): இந்த சட்டத் திருத்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே திமுக சார்பில் எதிர்க்கிறேன்.

கோபிநாத் (காங்கிரஸ்): இந்த சட்ட முன்வடிவை காங்கிரஸ் சார்பில் எதிர்க்கிறோம். சபாநாயகர் ஜெயக்குமார்: பேரவையில் உங்கள் கருத்து பதிவு செய்யப்படுகிறது.
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): இந்த சட்ட முன்வடிவை ஆதரிக்கிறேன். கலையரசன் (பாமக): இந்த சட்ட முன்வடிவை எதிர்க்கிறோம்.  தங்கம் தென்னரசு (திமுக): தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு சிறப்பான முறையில் இந்த கல்வி முறை கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியால் இந்த பேரவையில் சட்டமாக கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு அந்த திட்டத்தை கிடப்பில் போடும் நிலை உருவாகியுள்ளது. மாநில பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல் ஆகிய 4 விதமான பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள் இருந்த நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீரான கல்வியை தர வேண்டும் என்பதால்தான் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது.

சபாநாயகர் ஜெயக்குமார்: சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடாத வகையில் பேசுங்கள்.
தங்கம் தென்னரசு: முத்துக்குமரன் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல மாநில கல்விமுறைகளை ஆராய்ந்த பின்னரும் ஒரு பொதுவான கல்வி திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று நினைத்து சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டுவந்தோம்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: முத்துக்குமரன் குழு செய்துள்ள பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சமமான தரம், பள்ளிகளில் சமமான வசதிகள், நிர்வாகம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும் என்பதுதான் முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை. ஏதாவது ஒன்று மட்டுமே சமமாக இருந்தால், அதன் அடிப்படையில் சமச்சீர் கல்வியை உருவாக்க முடியும் என்று கருதக்கூடாது.

தங்கம் தென்னரசு: பொதுவான பாடத்திட்டம்தான் இந்த கல்வி முறையின் நோக்கம். அதைத்தான் கொண்டு வந்துள்ளோம். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): சமச்சீர் கல்வி என்பது பொதுவாக அடித்தட்டு மாணவர்களுக்கும் பயன் தரும் வகையில் உருவாக்கப்பட வேண்டும். இந்த கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, திட்டத்தை கொண்டு வர வேண்டும். எனவே, அரசின் சட்டத் திருத்த மசோதாவை புதிய தமிழகம் சார்பில் ஆதரிக்கிறோம். குரு (பாமக): கடந்த ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டபோது, அதில் ஒரு சில குறைபாடுகளை நீக்க வேண்டும் என்று எங்கள் கட்சியின் தலைவர் கூறினார். அந்த குறைபாடுகளை நீக்கி இந்த கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: சமச்சீர் கல்வி முறை சட்டம் கடந்த ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்டபோது, பேரவையில் இருந்த பாமக தலைவர் ஜி.கே.மணி, அறிமுக நிலையிலேயே அதை எதிர்ப்பதாக கூறினார். ‘முத்துக்குமரன் குழு குறிப்பிட்ட பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும். பிரிவுவாரியாக பாட திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். எனவே முழுமையாக இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்‘ என அவர் பேசியுள்ளார். செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி): அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல, சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே, இதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்ற மசோதாவை ஆதரிக்கிறோம்.

பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்): சமச்சீர் கல்வியை முழுமையான முறையில் உருவாக்க வேண்டும். திருத்தங்களை செய்து இந்த கல்வியை ஒரு காலவரைக்குள் கொண்டுவர வேண்டும்.
ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்): இது ஒரு சமூக நீதிக்கான சட்டமுன் வடிவு. இதில் திருத்தங்கள் இருக்குமானால், முத்துக்குமரன் குழு பரிந்துரையின் அடிப்படையில் திருத்தங்கள் செய்து காலதாமதமில்லாமல் சமச்சீர் கல்வியை கொண்டு வரவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா: ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட திட்டம் என்பது, ஒன்று முதல் 6ம் வகுப்பு வரை அல்ல. ஒன்று மற்றும் 6ம் வகுப்புக்கு மட்டுமே. முழுமையாக பரிசீலனை செய்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம். பண்ருட்டி ராமச்சந்திரன் (தேமுதிக): சமச்சீர் கல்வி என்பது எல்லா மாணவர்களுக்கும் சம வாய்ப்பு தரும் வகையில் இருக்க வேண்டும். இதில் உள்ள குறைபாடுகளை களைந்து, வளைந்த செங்கோலை நிமிர்த்தும் வகையில் சட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். திருத்த மசோதாவை தேமுதிக சார்பில் ஆதரிக்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடந்தது. அதைத் தொடர்ந்து சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி தருமாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சமச்சீர் கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய உயர்நிலை குழு அமைக்கப்படும். எனவே, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாது என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

....தினகரன் 07.06.2011
*****************

பொது ஜனம்; உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும்  வழங்கிய  தீர்ப்பின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தை சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்து  தடை செய்யமுடியுமா? அப்படியென்றால் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்களை எல்லாம் சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி சார்ப்பாக மசோதா கொண்டுவந்து தடைசெய்துவிடலாமே! என்னய்யா ஜனநாயகம் இது! சட்டத்தை மதிக்காதவர்கள் நடத்தும் சபைக்கு பெயர் சட்டமன்றமா?

பொது ஜனம்; சபாநாயகர் ஜெயக்குமார் கூட கேனத்தனமா சொல்லியிருக்குதே! "நீதிமன்றத்திலே சமச்சீர் கல்வி வழக்கு இருக்குது என்று"

பொது ஜனம்; அதுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்! வழக்கே சமச்சீர் கல்வி தடை குறித்து தான். நீதிமன்றம் கேள்வி கேட்டதை மறந்து விட்டிருக்கும்!

பொது ஜனம்; ஆமாய்யா! "தடை விதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா? உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தன்னிச்சையாக ஆணை பிறப்பித்து, நீக்க முடியுமா?" என்று கேள்விகேட்டிருக்கிறது

பொது ஜனம்; யோவ்! அதுக்குந்தாய்யா! இந்த மாதிரி மசோதா கொண்டு வந்திருக்குதுங்க!. என்னே! ஒரு புத்திசாலித்தனம்!. மக்கள் விரோதம் செய்யறதுக்குன்னே ரூம் போட்டு யோசிக்குங்க போலிருக்குது!

பொது ஜனம்; நாட்டிலே கொலை கொள்ளை, லாக்அப் டெத், ஒட ஒட விரட்டி பட்டப்பகலிலே கொல்றது எல்லாம் இதுங்க ஐடியா கொடுக்கறது தான். அதுக்கே கொடுக்கும் போது இதுக்கு ஐடியா பண்ண முடியாதா! என்ன! 

பொது ஜனம்; நாளைக்கு நீதிமன்றத்தால எதுனா பிர்சினைன்னா வந்தா! கபால்னு " நான் இதுக்கு கையெழுத்தே போடலை" என்று டகால்டி பண்ணிடும்"

பொது ஜனம்; ஆமாய்யா நாளைக்கு 8 ந்தேதி கேஸ் வருதுய்யா! அப்ப இந்த மசோதாவை காரணமாக் காட்டிடும் அப்படியே! இத்தனை பேர் ஆதரிச்சு வாக்களிச்சிருக்காங்க என்றும் காட்டிடும்! மீறிக்கேட்டா சட்டமன்ற விவகாரத்துல நீதிமன்றம் தலையிடலாமா? என்று கேள்வியும் முன் வைக்கும்! அதுக்குத்தான் இந்த டகால்டி வேலை!

பொது ஜனம்; அப்ப நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை, மக்கள் ஆதரவுக்கு எதிரா ஒரு தனிநபர், அது சார்ந்த கட்சி, அவங்களுக்கு சாதகமாக தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றம் மட்டும் நீக்கலாமா? அப்படியென்றால், நீதிமன்றம் கொடுக்கின்ற அனைத்து தீர்ப்புகளையும் அப்படி நீக்கிவிடமுடியுமே! நீதிமன்றமே தேவையில்லையே! இப்ப நீதிமன்றத்தையே இதுங்க கேவலப்படுத்திடுச்சி!

பொது ஜனம்; ஆமாய்யா! நீதிமன்றத் தீர்ப்புல சட்டமன்றம் தலையிடுதே!

பொது ஜனம்; ஜெயலலிதா எப்பவுமே சட்டத்தை மீறுகிற பொம்பளைதான்! அது என்னைக்குமே சட்டத்தை மதிச்சது கிடையாது! இந்திய இறையாண்மைக்குட்பட்டு நடக்கும் பொம்பளையும் கிடையாது. சட்டத்தை மீறி நான்கு இடங்களிலே வேட்புமணுத் தாக்கல் பண்ணும்! சட்டத்தை மீறி பதவியேத்துக்கும்! சட்டத்தை மீறி அரசு நிலைத்தை விற்கும்! கையெழுத்துப் போடலை என்று சட்டத்தின் முன்னாடியே பொய் சொல்லும்.

பொது ஜனம்; அதாவது பிக்பாக்கெட், கொலை, கொள்ளைக்காரங்க! கோர்ட்டை ஏமாத்துற மாதிரி! ஏதாதவது திருக்குசு வேலை பண்ணி ஏமாத்துறது தான் இதுக்கு வேலையே! அப்படி இல்லைன்னா வாய்தா வாங்கியே காலத்தை ஓட்டிடும்! 

பொது ஜனம்; என்னத்தை! லோக்பால் மசோதா கொண்டு வந்து என்னத்தை கிழிக்க முடியும்? இதுங்களையே கிழிக்க முடியலை! பிரதமரை எப்படி கிழிக்கப்போறாங்க!

பொது ஜனம்; உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் முதலில் இந்த சட்டவிரோத செயல்களுக்கு முற்று புள்ளி வைக்கவேண்டும். இல்லையென்றால் இதுங்க பாட்டுக்குனு மன்னராட்சி மாதிரி இதுங்களுக்கு எது பெனிபிட்டோ? அதை மக்களுக்கு எதிரா நிறைவேத்திகிட்டு இதுங்க தொப்பையை ரொப்பிகிட்டு போயிடும். 

பொது ஜனம்; முதல்லை இதுங்களுக்கு ஜனநாயகம் என்றால் என்ன? எனபதை பத்தி கத்து கொடுக்க சொல்லுங்க! அப்பறமா? அரசியலுக்கு வரட்டும்! இதுங்க இப்படி பன்றாதால தான் மத்தவங்க யாருமே சட்டத்தை மதிக்கிறது இல்லை!அதுனால தான்  கொலை கொள்ளை இப்ப சர்வசாதாரணமா நடக்குது!

பொது ஜனம்; யோவ் மரியம் பிச்சை செத்தது கார்னாலே! அதுக்கு எதுக்கு லாரியை பிடிக்கணும்! அவ் போன க்கார் அவரை சாகடிச்சிடுச்சி!
பொது ஜனம்; உனக்குத் தெரியுது! போலீசுக்கு தெரியலியே!

பொது ஜனம்; ஆமாய்யா! "லாக் அப் டெத்" பண்ணிட்டு போலீஸ்காரன் தப்பிச்சு ஒடிட்டான்யா! அவனை இன்னும் பிடிக்கவேயில்லையே!  மந்திரி மரியம் பிச்சை முட்டிகிட்டு மண்டைய போட்ட லாரியையும், டிரைவரையும்தான் பிடிச்சு இன்று வரை நொங்கு எடுத்துகிட்டு இருக்குதுங்க! 

பொது ஜனம்; போலீஸ் விசாரணை என்றாலே எல்லோரும் பயந்து தற்கொலை பண்ணிக்கிறாங்கய்யா! இன்னைக்கு கூட போலீஸ்காரன் துரத்தினதுல பயந்து கிணத்துல விழுந்து ஒருத்தர் தற்கொலை பண்ணிகிட்டார்யா!

பொது ஜனம்; சரி! இரண்டு கம்யூனிஸ்டு காரங்களும் இந்த சமச்சீர் கல்வி ரத்து மசோதாவுக்கு எதிர்ப்பே தெரிவிக்கலையே! அப்படி என்ன கூட்டணி! கொள்கையை வித்த கூட்டணியா!

பொது ஜனம்; ஆமாய்யா! 200 பேர் தீர்மானத்துக்கு ஆதரவா வாக்களிச்சிருக்காங்கன்னு செய்தி போட்டிருக்கு!  அப்ப கம்யூனிஸ்டுகளும் இந்த ரத்துக்கு ஆதரவு! இவங்க தானே இந்த கல்வி வேணும்னு அடம் பிடிச்சவங்க. வெளியிலே ஜனநாயநாயக வாலிபர் சங்கம் (DYFI) போராட்டம் உள்ளே சட்டசபையிலே ஆதரவா!?  நல்லா "டகால்டி" வேலையை பார்க்கிறாங்கய்யா!

பொது ஜனம்; ஆமாம்! இந்த "கப்பல் கேப்டன்"களுக்கு எல்லாம் இது பற்றி அக்கறை இல்லை போலிருக்கிறது. அவங்கப் பிள்ளைங்க மெடரிக்குலேஷன்லே படிச்சி இங்கிலீபீஸ்ல எல்லாம் பேசிறதுனாலே பெருமையடைஞ்சு இதை கழட்டி விட்டிருப்பாரு! அவருக்கு இப்ப "தமில்"லே  பிடிக்காத வார்த்தை "சமச்சீர் கல்வி"  ஆக இருக்குமோ! ஆங்!

பொது ஜனம்; ஏன் "சமத்துவம்" பேசிறவங்களுக்கு "இரட்டை இலை"யில சமபந்தி போஜனம் பண்ணவருக்கும் கூட இப்ப இந்த வார்த்தைகளை பிடிக்காது!

பொது ஜனம்; அதுங்க! ஜெயித்ததே பெரிய விஷயம்! அரசியலிலே கொடி கட்டி பரந்தவங்களா? மக்கள் பிரச்சினையை அணு அணுவாக ஆராய்ந்தவர்களா? இல்லை அரசியலை கரைச்சு குடிச்சவங்களா!  ஏதோ வந்துட்டாங்க இப்ப ஒப்பேத்துறாங்க! "சமத்துவம்", "தேசியம்"....."திராவிடம்" இதெல்லாம் சும்மா பம்மாத்து காட்டறதுக்கு தானே! அதுக்கு என்ன அர்த்தம்னு நம்மளையே திருப்பி கேள்வி கேப்பாங்க! அவங்களுக்கு சமச்சீர் கல்வி இருந்தா என்ன? இல்லாட்டி என்ன? அவங்களுக்கு என்ன போச்சி! மயிராப்போச்சுணு விட்டுட்டுப் போயிடுவாங்க!

பொது ஜனம்; கப்பல் கேப்டன்கள் ஏற்கனவே கையை காட்டி "நாங்க எதிர்க்க வேண்டியதுக்கு எதிர்ப்போம்! ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா இருப்போம்னு! அப்பவே  அதிமுக வை மிரட்டயிருக்குதே!" ."காலை" சுத்த வேண்டிய நேரத்துல சுத்துவேன்னு! சொல்லியிருக்குதே! 

பொது ஜனம்; இப்ப அடக்கி வாசிச்சிருக்கும். இது அதுக்கு பிடிச்ச விஷயம். ஒரு வேளை அதுவும் தனியார் ஸ்கூல் நடத்திகிட்டு இருக்கலாம்! அதுதான் கல்லூரி எல்லாம் நடத்திகிட்டு இருக்குதே! இது அதுங்களுக்கு சாதகமான விஷயமாக இருக்கும்!

பொது ஜனம்;ஓ அப்படியா! நல்லாதான் ஒட்டறாங்கய்யா!

No comments: