Pages

Friday 10 June, 2011

ஜெயலலிதாவின் பாசிச அரசுக்கு கிடைத்த முதல் மரண அடி.....




சென்னை: சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் நடப்பு ஆண்டில் சமச்சீர் கல்வி திட்டம் தொடரலாம். சமச்சீர் கல்வி ரத்து செய்த தமிழக அரசு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில நாட்களாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து சமச்சீர் கல்வியை ரத்து செய்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டு முதல் 1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் திட்டத்தை தொடங்கலாம் என தீர்ப்பு வழங்கியது. 

******************
பொது ஜனம்; ஆகா பலே!  பலே! சரியான தீர்ப்பு! ஜெயலலிதாவின் பாசிச செயல்பாட்டுக்கு கிடைத்த முதல் மரண அடி! அதுவும் ஒரு மாதத்துக்குள்ளேயே!

பொது ஜனம்; நான் தான் முதல்லேயே சொன்னேனே! நீதிமன்றம் தான் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாத்தணும் என்று! அதைத்தான் செஞ்சிருக்காங்க!

பொது ஜனம்; இது அதுக்கெல்லாம் மசியாதுய்யா! புள்ளைங்க படிப்பு பாழானா இதுக்கு என்ன? வந்தது?. உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு போய் வேண்டுமென்றே இழுக்கும்! 

பொது ஜனம்; இப்பவே பிள்ளைங்க, பெற்றோர்கள் பேசிக்கிறாங்க 1 மாதம் வரை பள்ளிகள் திறக்காமல் போகும் என்று! சின்னப் பசங்களுக்கு படு குஷிய்யா! அதுங்களுக்கு என்ன தெரியும்?


பொது ஜனம்; அப்பறம் ஸ்பெஷன் கிளாஸ், லீவு நாள்ல எல்லாம் பள்ளின்னு போட்டு பிள்ளைங்களை வறுத்தெடுப்பாங்கய்யா!

பொது ஜனம்; அப்ப பெற்றோர்கள் வீதியில இறங்கி போராட வேண்டியது தான்!பெரிய பிரளயத்தை உருவாக்க வேண்டியது தான்!

பொது ஜனம்; நீதிமன்றம் நல்லாத்தான் கேள்வி கேட்டிருக்குதுய்யா! அப்பக் கூட இதுங்களுக்கு புத்தி வராதுய்யா!

பொது ஜனம்; பணம் வீணான பரவாயில்லை! பணத்தை பத்தி அரசுக்கு  கவலை இல்லைன்னு சொல்லியிருக்குதே! பணம் என்ன இவங்கப்பன் வீட்டு சீதனத்திலேயிருந்து வந்ததா? இல்லை தமிழக அரசு என்பது அதிமுக வின் கட்சி ஆப்பிசா? இல்லை ஜெயலலிதா வீட்டு வராண்டாவா?

பொது ஜனம்; கேளு! கேளு! நல்லாக் கேளு! அப்பக் கூட இதுங்களுக்கு புத்தி வராது!


பொது ஜனம்; இல்லைப்பா அவங்க சொந்த பணத்திலேயிருந்து எடுத்து கொடுத்துடுவாங்கப்பா அவங்க கிட்டே இல்லாத பணமா?


பொது ஜனம்; அப்ப எல்லா நஷடத்தையும் அவங்களே சரிகட்ட சொல்லு! எதுக்கு மத்திய அரசாங்கத்துகிட்டேயும், மாநில மக்கள் கிட்டேயும் வரி வசூல் பண்ணணும்! மொத்த பணத்தையும் அவங்க வீட்டு கஜானாவிலிருந்தே எடுத்து போட்டுக்கலாம்! எதுக்குமே மானியம், கடன் என்று எங்கேயும் வாங்க வேண்டியது இல்லை! வரியற்ற மாநிலமா? தமிழகத்தை முன் மாதிரியா ஆக்கிப்புடலாம்!

பொது ஜனம்; அதிரடி தீர்ப்புய்யா! இதுனாலே மெட்ரிக், தனியார் பள்ளி கொள்ளைக்கார நிருவாகிகள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இன்னைக்கு ரூம் போட்டு தண்ணி அடிப்பாங்க!

பொது ஜனம்; நீதிமன்றத்துக்கு எதிரா செயல்படற இந்த ஆட்சியின் செயல் பாட்டை ஒரு ஆறு மாதத்திற்கு செயல்படவிடாமல் அரசியல் சட்டப்பிரிவு 352,.....355.... 356,357 இன் படி பரிசீலித்து முடக்கிட்டால் என்ன? இப்ப அப்படிப்பட்ட அசாதாரண சூழ்நிலை தான் நிலவுது!

பொது ஜனம்; இதையும் நீதிமன்றமே  அரசுக்கு பரிந்துரைக்கலாம்!

No comments: