Pages

Friday 17 June, 2011

அதிமுக அமைச்ச நிபுணர் குழு நியாயமாக இருக்குமா? இல்லை கூட்டு களவாணித்தனம் பண்ணுமா?


சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை ஆராய சாரங்கி தலைமையிலான நிபுணர் குழுவை அமைத்தது தமிழக அரசு!




சென்னை; தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஆராய்வதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் இடம் பெறும் பிரதிநிதிகள் பெயர்களையும் அரசு அறிவித்துள்ளது. சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘1 மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். மற்ற வகுப்புகளுக்கான சமச்சீர் கல்வியை நிபுணர் குழு ஆய்வு செய்து இரண்டு வாரத்தில் சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கூறியது.

கோடை விடுமுறை முடிந்து கடந்த 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. எந்தப் பாடத் தொகுப்பு என்பது தெரியாததால் வகுப்புகளில் மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் முறையில் இலக்கணம், பொதுக் கணக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:  பள்ளி மாணவர்களுக்கு தரமான மற்றும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறை சட்டத்தில் அதிமுக அரசு திருத்தம் கொண்டுவந்தது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஒரு சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், அரசின் திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த சிறப்பு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், ‘பாடத்திட்டத்தின் தரம் மற்றும் பாட நூல்களின் தரம் ஆகியவை குறித்து ஆராய தலைமைச் செயலாளர் தலைமையில், இரு மாநில பிரதிநிதிகள், இரு கல்வியாளர்கள், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினராக கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்தது. இந்தக் குழு தனது அறிக்கையை ஜூலை 6ம் தேதிக்குள் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு இணங்க 9 பேர் கொண்ட குழுவை அரசு நியமித்து உத்தரவிடுகிறது.

குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம்:

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, குழுவின் தலைவராக இருப்பார். மத்திய இடைநிலைக் கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் (கல்வி) ஜி.பாலசுப்பிரமணியன், சென்னை லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன், கல்வியாளர்கள் தரப்பில் சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளிகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் சி.ஜெயதேவ், பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் முதல்வர் மற்றும் இயக்குனர் ராஜலட்சுமி பார்த்தசாரதி, தேசிய என்சிஇஆர்டி சார்பில் டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் கணிதவியல் கல்வித் துறையின் பேராசிரியர் பி.கே.திரிபாதி, டெல்லி சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவின் உறுப்பினர் செயலராக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி இருப்பார்.

இவ்வாறு அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தக் குழு, சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும். அதன் அடிப்படையில் தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்த இறுதி உத்தரவை ஐகோர்ட் அறிவிக்கும்.

...தினகரன் 17.06.2011
****************
பொது ஜனம்; என்னய்யா இப்படி நிபுணர் குழு அமைச்சது மக்களுக்கு சரியான நிபுணர் குழுவா? இல்லை ஜெயலலிதாவின் மக்கள் விரோத வீம்புக்கு அமைச்ச சாதகமான நிபுணர் குழுவா?

பொது ஜனம்; ஏன் அப்படிசொல்றே?

பொது ஜனம்; பின்னே எப்படிய்யா? இந்த நபர்கள் அனைவரையும் உச்சநீதிமன்றம் நியமிக்கலியே! நிபுணர் குழு அமைக்கவேண்டும் என்ற தீர்ப்பு மட்டும் தானே வழங்கியிருக்குது! இதற்கான நபர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை குற்றவாளிகள் கிட்டேயே தானே விட்டு இருக்குது! இது எடுக்கும் ஆய்வு எப்படி? நியாயமானதாக இருக்கும்!?

பொது ஜனம்; இந்த நிபுணர் குழு நபர்களை அதிமுகவுக்கு சாதகமாக சொல்லுகிறவர்களை வைத்துக் கொள்ளுவார்களே!

பொது ஜனம்; அது எப்படிய்யா? அவ்வளவு நிச்சயமா சொல்றே?

பொது ஜனம்; யோவ்! முண்டம்! அவங்க தான் சல்லிசா முடிக்கவேண்டிய மேட்டரை! வீம்பு பண்ணி மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லைன்னு நம்ம மசிருக்கு! என்னாச்சின்னு மேல் முறையீடு பண்ணி இன்னைக்கு இந்தளவு அக்கிரமம் பண்ணிகிட்டு இருக்குதுங்களே! 

பொது ஜனம்; ஆமாம்! வேதாரண்யத்தில் 1 லடசம் சமச்சீர்  புக்கை வேறு கொளுத்தினாங்க! இன்னும் நிறைய அநியாம் பண்ணிகிட்டுதான் இருக்காங்க!

பொது  ஜனம்; இருக்கட்டுமேய்யா! எப்படி இருந்தாளும்! சமச்சீர் கல்வியை அமல் படுத்தி தானே! ஆவணும்! அது தானே உச்சநீதிமன்ற தீர்ப்பு!

பொது ஜனம்; அது தான் ஒன்னாம் வகுப்புக்கும் ஆறாம் வகுப்புக்கும் புத்தகம் அனுப்பியாச்சே! (அப்படின்னு சொல்லியிருக்குதுங்க!)

பொது ஜனம்; மீதி வகுப்புகளுக்கு எந்த பாடம் நடத்தலாமன்னு நிபுணர் குழு சொல்றதை வைச்சித்தான் என்று ஒரு பிட்டை போட்டிருக்கே! இது அதுங்களுக்கு போதுமே! 

பொது ஜனம்; சரிய்யா இந்தக் குழுவை வைச்சி மிரட்டி சமச்சீர் கல்வி சரியில்லை வேணாம்! என்று  இப்போதைக்கு சாத்தியமில்லை! இன்னும் பல வருடம் தேவைப்படுது என்று அறிக்கை சமர்ப்பிக்க சொல்லிடுச்சின்னா!

பொது ஜனம்; கரெக்ட்! அதானால இப்போதைக்கு பழைய புத்தகமே  அமல் படுத்தலாம் என்று சொல்லிட்டாங்கன்னா என்ன பண்ணுவாங்க!

பொது ஜனம்; எப்படிய்யா! அதிமுக திருட்டுத்தனம் மொத்தத்தையும் நேர்ல பாத்தா மாதிரி சொல்றீங்க!

பொது ஜன்ம; ஆமாம்! சட்டங்கள் எல்லாமே இந்த திருட்டுத்தனத்துக்கு வழி விட்டுத்தான் இயற்றப்பட்டது மாதிரியே இருக்குது!

பொது ஜனம்; அது எப்படிய்யா? சட்டம் இயற்றும் பொழுதே முழுத்திருட்டுத்தனத்தையும், ஒட்டையையும் கணக்கில் எடுத்து ஒரு அரசால் இயற்ற முடியும்?

பொது ஜனம்; அப்ப இதுக்கு முன்னாடி அதை தமிழக அரசு அமைச்ச குழு பொய் என்பதை எப்படியும் நிருபிக்கணுமே! திமுக அரசு அமைச்ச நிபுணர் குழு அனைவரையும் குப்பையில்  தள்ளப்படுவாங்களே! 
பொது ஜனம்; சரி!இதை எப்படி? கோர்ட்டு ஏத்துக்கும்? 

பொது ஜனம்; ஒரு வேளை! அதிமுக அமைச்ச நிபுணர் குழுதான் சரி! என்று  நீதிமன்றம் தீர்ப்பு கூறினா? அதிமுக சார்பு தீர்ப்பா ஆகாதா? அதை மறுஆய்வுக்கு உட்படுத்தப்படாதா? விசாரணைப்பண்ணப்படாதா?

பொது ஜனம்; இதை திமுக அரசு இருக்கும் பொழுதே ஏன் கூறவில்லை என்ற கேள்வி வராதா?

பொது ஜனம்; அப்ப திமுக அரசு அமைச்சது மட்டும் சாதகமாக இருக்காதா? என்று கேப்பாங்களே!

பொது ஜனம்; அதிமுகவையும் இதேமாதிரி தான் குற்றம் சாட்டிக் கேப்பாங்க! திமுக நிபுணர் குழுவில் இருந்த கல்வியாளர்கள் யாரையும் இதில் ஈடுபடவைக்கவில்லையே!

பொது ஜனம்; அப்ப ஜெயலலிதா மீண்டும், இந்த கல்வியை முடக்கத்தான், தனியார் பள்ளிக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கும் டகால்டி வேலைக்குத்தான் முயற்சி பண்ணிகிட்டு இருக்குது!

பொது ஜனம்; இதை உடனடியாக பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு, பொது பள்ளிகள் மேடை அமைப்புகள் இதிலும் கேவியட் மனு போட்டு நடுநிலையாக ஆராய்ந்து மக்களுக்கு சாதகமான தீர்ப்பை கொண்டு வரமுயல வேண்டும்!

பொது ஜனம்; பிழைகள் வந்தால் பரவாயில்லை! பிழைகள் சுற்ற்றிக்கைகள் மூலம் நீக்கலாம்!

பொது ஜனம்;ஒரு வேளை முழுவதும்சரியில்லை என்று அதுமுக அராஜக அரசு கூறினால்?

பொது ஜனம்; அது எப்படி முடியும்? ஒன்னாவதுக்கும் ஆறாவதுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தியாச்சே! அது மட்டும் சரியாக இருக்கும் பொழுது இது மட்டும் எப்படி சரியில்லாமல் போகும்!

பொது ஜனம்; உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை கவனிக்கத்தவறிவிட்டதே! ஒன்னாவதும் ஆறாவது பாடத்தையும் அதே நிபுணர் குழு தானே ஆராய்ந்து அமல் படுத்தியது.

பொது ஜனம்; ஒரே கன்பியூஷன்யா!

பொது ஜனம்; இதையெல்லாம் தெரிஞ்சும் எதுக்கு உச்சநீதிமன்றம் அவங்க கிட்டேயே அதிகாரம் கொடுத்து, அவங்க தலைமைச்செயலாளர் கீழே நிபுணர் குழு அமைக்கணும்! இது ரொம்ப  போங்கா இருக்குதே!

பொது ஜனம்; அது எப்படிய்யா? அவ்வளவு சல்லீசா தீர்ப்பு கூறிடுவாங்க! குறை சொன்னாங்கன்னா! அவங்க! கேக்கமாட்டாங்களா? இது ஏன் அந்த திமுக அரசு நிபுணர் குழுவுக்கு தெரியாமப் போனது என்று?

பொது ஜனம்; இல்லைய்யா! இதையும் கோர்ட்டு அரசின்  கொள்கை முடிவு என்று சொல்லிட்டாங்கன்னா?

பொது ஜனம்; அப்படின்னா இது முந்தய திமுக அரசின் கொள்கை முடிவு ஆகாதா? ஒரு மாநில அரசின் கொள்கை முடிவு எத்தனை ஆண்டு காலம் அமலில் இருக்கும்? நாள்கணக்கிலா, வரா கணக்கில? அல்லது மாதக்கணக்கிலா? அல்லது வருடக்கணக்கிலா?  இல்லை இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்வரையா? அப்படியென்றால் உச்சநீதிமன்றத்தை கூட, தீர்ப்பைக்கூட அடிக்கடி மாற்றிக்கொண்டேயிருக்கலாம்! ஏன்னா அதுவும் கொள்கை முடிவு தானே!

பொது ஜனம்; டெல்லியிலே!
எவ்வளவு கட்சி ஆட்சிக்கு வந்து! வந்து! போயிருக்கிறது! என்னய்யா புடலங்கா இந்திய அரசியல் சட்டம்!

பொது ஜனம்; ஒரேயொரு அரசு! அதுவும் தமிழக அரசு! அதுவும் ஒரே விஷயத்துக்கு! இத்தனை விதமான கொள்கை முடிவா? என்று நீதிபதிக்கு தெரியாதா? என்ன? அவரு என்ன படிக்காத பட்டிக்காடா? குண்டம்மா போல!


பொது ஜனம்; அதானே! கொள்கை முடிவு அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்குமா? அதுவும்  மக்களை பாதிக்கின்ற வகையில் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் சட்டத்தை திருத்திக்கொண்டேயிருக்கலாமா? அடுத்து வருபவர் இதையும் மாத்துவரா? அதுக்கு எதுக்கு நிபுணர் குழு? மக்கள் குழுவோட இவங்க எவரும்  கலந்துக்கவே மாட்டாங்களா? பெரும்பான்மையான மக்களின் கருத்தை கேக்கவே மாட்டாங்களா? நாங்க தானே இவங்களை ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம்! 

பொது ஜனம்; ஹிஹி........தோத்தவங்களுக்கும், ஜெயியியியியிச்ச்ச்ச்ச்சவங்களுளுக்கும் மக்களாகிய நாங்க தான் ஓட்டு போட்டோம்! எல்லோருமே தமிழக மக்கள் தான்! நாங்க நினைச்சா எப்பவேணும்னா! இறக்குவோம்!


No comments: