Pages

Thursday 23 June, 2011

சமச்சீர் கல்வி: "சோ"வுக்கு வந்த சந்தேகம்!

   
 


ள்ளிகள் திறந்தன் பாடம் நடைபெறவில்லை. ஆசிரியர் வந்தார், அமர்ந்தார். என்ன பாடம் சொல்லிக்கொடுப்பது என்று அவருக்கும் தெரியவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி சமச்சீர் கல்விப் பாடத்திட்டங்களை ஆராய வேண்டும். அதன்பின்னர் புதிய புத்தகங்கள் தயார் செய்யப்படுமா? அதற்கு எவ்வளவு காலமாகும்? குறைந்த பட்சம் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

     ஏற்கனவே பள்ளிகள் திறப்பது பாதி மாதம் தள்ளிப்போய்விட்டது. புதிய பாடத்திட்டங்கள் மாணவர்களின் கரங்களில் தவழ இன்னும் பலமாத காலமாகும் என்றால் இந்த ஆண்டுபடிப்புப் பாழ் என்று அர்த்தம். தமிழகம் இதுவரை இத்தகைய விசித்திரமான, விநோதமான நிலைமையைச் சந்தித்ததில்லை.

     இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன? இன்றைய புதிய அரசு அமைந்ததுமே ஒரு காரியம் செய்தது. புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் செல்வி ஜெயல்லிதா தலைமையில் நடைபெறுகிறது. அடுத்தநாள் மீண்டும் கூடுகிறது. சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தீர்மானிக்கிறது. காரணம் சமச்சீர் கல்விக்கான பாடத்திட்ட்ங்கள் தரமற்றவை என்று விளக்கம் தருகிறார்கள்.

     அமைச்சரவைக் கூட்டங்களின் இடைப்பட்ட காலம் இருபத்தி நான்கு மணி நேரம். அதற்குள் சமச்சீர் கல்வித் திட்டப்பாடங்கள் தரமற்றவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இருக்கட்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதனை ஆராய கல்வியாளர் குழு வேறு அமைக்க முன்வந்திருக்க வேண்டும்.

     சமச்சீர் கல்வித் திட்டத்தை பத்தாம் வகுப்பு வரை செயல்படுத்திக்கொண்டே பாட புத்தகங்களில் உள்ள குறைகளை நீக்கி நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் என்ன முடிவு கண்டார்கள்? பழைய பாடத்திட்டங்களையே நடத்துவது என்று அவசர அவசரமாக அச்சடிக்க ஆரம்பித்து விட்டார்கள். பழைய பாடத்திட்டங்கள் என்றால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒருமுறைக்கு இருமுறை தீர்ப்பளித்து விட்டது.

     சமுதாயத்தில் நால்வருணம் என்பது போல பழைய பாடத்திட்டங்களும் நால் வருணம் கொண்டவை. நான்கு வகையான பாடத்திட்டங்கள் கொண்டவை எனவேதான் அது கூடாது என்று சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். கல்வியிலும் சமத்துவம் காண்பது தான் அதன் லட்சியம்.

     சமச்சீர் கல்வித்திட்டம் கூடாது என்று தொடர்ந்து போராடுகிறவர்கள் தனியார் கல்வித்துறை வியாபாரிகள் தான். அவர்கள் கல்வியை பணம் கொழிக்கும் வர்த்தகமாகக் கருதுகிறவர்கள். எல்லாப் பள்ளிகளிலும் ஒரே பாடம்-ஒரே தேர்வு என்றால் அவர்களுடைய கஜானா வறண்டு விடும். எனவே சமச்சீர் கல்வியை அவர்கள் எதிர்கிக்றார்களென்றால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் அ.தி.மு.க அரசின் இரண்டாம் நாள் அமைச்சரவைக்கூட்டத்திலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று எடுத்த அவசர முடிவைத்தான் நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.

     சிலர் வுயர்வகைக் கல்வி பெறுவதைத் தடுப்பதற்காகவே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவர்ப்பட்டதாகப் பெருமளவில் பேசப்பட்டதாக 'துக்ளக்' சோ கூறுகிறர். ஒரு வேளை அவரைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அச்சத்தால் தான் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முன்வந்ததோ என்று எண்ண இடமிருக்கிறது.

     'சோ' கூறும் அந்தச் சிலர் உயர்கல்வி பெறுவதைப் போல அனைவருக்கும் அதே கல்வி கிடைக்கவேண்டும் எனபது தான் சமச்சீர் கல்வியின் லட்சியம்.

     சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் கல்வி கனதனவான்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். டெல்லி உச்சநீதிமன்றம் நோக்கி ஒடினர். முந்தைய கலைஞர் அரசு செயல்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று அந்த நீதிமன்றமும் நல்ல தீர்ப்பு வழங்கியது. அதன்பின்னர் தான் அவர்கள் ஒய்ந்தனர்.

     ஆனால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று  அ.தி.மு.க அர,சு எடுத்த முடிவு அவர்களுக்கு கிடைத்த புதையல்.


     ஆனால் மக்கள் அதனை ஏற்கவில்லை. சமச்சீர் க்லவித் திட்டத்தை ரத்து செய்யாதீர் தொடர்க என்று தமிழகம் தழுவிய அளவில் குரல் எழும்பியது. அதன் எதிரொலியை சென்னை உயர்நீதிமன்றத்தில் கேட்டோம்.

     சமச்சீர் கல்வியைத் தமிழக அரசு நிறுத்தி வைப்பதை எதிர்த்து உய்நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளும் வழக்குத் தொடர்ந்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தை தொடரவேண்டும் என்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி பத்தாம் வகுப்புவரை அந்தப் பாடங்களைத்தான் நடத்தவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

     அதன்பின்னராவது அ.தி.மு.க அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல் படுத்த முன்வந்திருக்க வேண்டும். ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவசர அவசரமாக உச்சநீதிமன்றத்திற்கு ஓடியது. எப்படியும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற முனைப்போடு தான் அ.தி.மு.க அரசு செயல்படுகிறது என்ற எண்ணம் வலுப்பெற்றது.

     சமச்சீர் கல்வித்திட்டம் தொடர வேண்டும்.  வேண்டுமானால் பாட்த்திட்டங்களை பரிசீலனை செய்யங்கள் என்று தமிழக அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியிருக்கிறது. அதற்காக ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவில் யார் யார் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

     மாநிலத்தை எத்தனையோ பிரச்சினைகள் எதிர்நோக்கியிருக்கின்றன.  தேர்தல் காலத்தில் மக்களுக்கு  அ.தி.மு.கழகம் எவ்ளவோ வாக்குறுதிகளை அளித்திருக்கிறது. அதனை விடுத்து குளவிக் கூட்டில் கை வைத்தது போல சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீது ஏன் கைவைத்தது?

     சமச்சீர் கல்வித் திட்டம் செயலுக்கு வருவதை இனி தடுக்க முடியாது என்ற நிலை வந்த போது கல்விக் கூட வணிகர்கள் என்ன செயதனர்? பாடத்திட்டங்களில் ஒட்டை உடைசல்கள் என்றனர். அதே வாதத்தைத்தான் 'துக்ளக்' சோவும் சொல்கிறார். சமச்சீர் கல்வி வந்தால் எல்லோரும் தரம் தாழ்ந்த கல்வி ஏற்க வேண்டிய நிலை ஏற்படும் என்கிறார்.  அவர்களுடைய வாதங்களைத்தான் இன்றைய தமிழக அரசும் முன்வைத்தது.  வேண்டுமானால் தேவையற்ற பாடங்கள் என்று கருதுவதை நீக்கிவிடுங்கள் என்று ஆன்றோரும் சான்றோரும் அரசிற்கு அறிவுரை கூறினர்.   இன்றைக்குப் பாட புத்தக்ங்கள் இல்லாமலே, என்ன படிக்கப்போகிறோம் என்று தெரியாமலே மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள்.  இந்த நிலை எத்தகைய எண்ணத்தை ஏற்படுத்தும்.

     சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த வாதம் என்ன?  பாட புத்தகங்களில் கலைஞர், கனிமொழியின் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தான்.  அந்தப் பாடங்களை நீக்குவது பற்றி தமக்கு ஆட்சேபணை இல்லை என்று கலைஞரும் சொல்லிவிட்டார்.  சமச்சீர் கல்வியில் நாட்டம் கொண்டோரும் சொல்லிவிட்டனர்.

     குப்பன் வீட்டுப் பிள்ளைக்கும் கோமான் வீட்டுப் பிள்ளைக்கும் ஒரே சமச்சீர் கல்வி என்பதனை வசதி படைத்தவர்களும் ஆதிக்க சமூகத்தினரும் தான் விரும்பவில்லை.  பிறப்பால் ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல கல்வியிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதுதான் தங்களுக்கு கவுரவம் என்று நினைப்பவருகளும் எதிர்க்கிறார்கள.  இந்த நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பத்ற்கான மசோதாவை சட்டமன்றத்திலும் நிறைவேற்றி விட்டார்கள்.  சட்டமன்றம் நிறுத்தி வைக்கலாம்.  ஆனால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றமே அறிவுறுத்திவிட்டது.

     உச்சநீதிமன்றத்தை  தமிழக அரசு நாடியதைத் தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகங்களும் படையெடுத்தன. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி பழைய பாடங்களையே நடத்துவது என்று தமிழக அரசு எடுத்த முடிவை செயல்படுத்த வேண்டும் என்பது அவைகளின் கோரிக்கை. அவைகளின் மனுக்களை விசாரிக்காமலே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.  சமச்சீர் கல்வித் திட்டம் செல்லும் என்று ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்ட பின்னர் இந்தக் கோரிக்கை தேவையற்றது என்று தெரிவித்திருக்கிறது.

     சமச்சீர் கல்வி இல்லையென்றால் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஜாதி, மெட்ரிக்குலேஷன் பள்ளி  மாணவர்கள் ஒரு ஜாதி, மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் வேறொரு ஜாதி என்ற நிலைதான் உருவாகும்.

     ஒரு சிலரு உயர்வனக் கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வித் திட்டம் என்ற 'சோ' போன்றவர்களின் சந்தேகங்களைப் போக்குங்கள்.  அந்த ஒரு சிலருக்கும் மனக்குறை வேண்டாம்.  அதே சமயத்தில் இந்த ஆண்டே, சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையையும் பரிசீலியுங்கள்.

     அ.தி.மு.கழகம் இன்றைக்கு ஆட்சி பீடம் ஏறியிருப்பதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு சிறப்பான பங்கு உண்டு. அரசு ஊழியர்கள், வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை ஊழியர்களின் வாக்குகளை அந்தக் கட்சிதான் திரட்டி தந்தது.

     சமச்சீர் கல்வி என்பது கோபாலபுரத்து சரக்கு அல்ல.  சமச்சீர் கல்விக்காக இரண்டு கமுயூனிஸ்டு கட்சிகளும் நீண்ட நெடுங்காலமாகப் போராடி வந்தன.

     சமுதாயத்தில் ஜாதி பேதமற்ற சமத்துவம் என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை.  அந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் கல்வயிலும் சமத்துவம் வேண்டும் எனபதற்காக கலைஞர் அரசு சமச்சீர்திருத்தக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தது.

     எனவே இப்பொதைய பாடத்திட்டங்கள் குறைபாடுகள் உள்ளவை என்று கருதினால் புதிய பாடத்திட்டங்களை தயார் செய்யுங்கள்.  ஆனால் அந்த பாடத்திட்டங்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை திறம்படச் செயல்படுத்துவதாகவும், செழுமைப்படுத்துவதாகவும் அமையவேண்டும்.

     ஒரு சிலருக்கு மட்டுமே உயர்ந்த கல்வி என்ற வெளிச்சம் இதுவரை இருண்ட கண்டத்தில் இருக்கும் மக்களின் வீடுகளையும் எட்டிப் பார்க்க வேண்டும் எனபதே சமச்சீர் கல்வியின் சித்தாந்தமாகும்.

..........சோலை ...நக்கீரன் ஜூன்22-24,2011

*******************

பொது ஜனம்; இது என்ன சோ முண்ட கல்ப்பைத்தனமா ஐடியா பண்ணுது.....

பொது ஜனம்; அது பார்ப்பன கோஷ்டிக்காக ஐடியா பண்ணுது.......உயர் கல்வி எனபது இந்த கோஷ்டிக்கு மட்டும் தான் இருக்கணும்னு நினைக்குது. எல்லோருக்கும் உயர் கல்வி என்பது தான் சமச்சீர் என்பது அந்த முண்டகலப்பைக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதோட பார்ப்பன டகால்டி வேலை தான் இதெல்லாம். அது பாப்பாத்திக்கும் இதோட உளுத்துப்போன ஐடியாவை சப்ளைப் பண்ணுது.....

பொது ஜனம்; இது ஐடியாக் கொடுக்கலைன்னா அதுக்கு தெரியாதா? 

பொது ஜனம்; ஏன் தெரியாது! கேடிகளுக்கு கேடிவேளைத்தானே தெரியும். இது கேடி லேடி.....

பொது ஜனம்; பழையப் பாடப்புத்தகம் வேணும்னா அதையும் எல்லா தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துக்கும் சமச்சீரா ஆக்குமா? 

பொது ஜனம்; அது எப்படி ஆக்கும்!? அது தான் உதவாத படிப்பு என்று இதுங்களாகவே முடிவு கட்டிடுச்சே! இப்ப புரியுதா! கேடி லேடியோட நோக்கம் என்னவென்று!

பொது ஜனம்; அப்படியே பழைப்பாடப்புத்தகத்தை எல்லா பள்ளிகளும் சமமா பின்பற்றணும்னா இந்த கொள்ளக்காரப் பள்ளிக்கூடங்கள் ஒத்துக்குமா? அப்புறம், இந்த கொள்ளக்காரப் பள்ளிக்கூடங்க, கேடி லேடியோட ரகசியமாப் போட்டு கொண்ட ஒப்பந்தம் என்னாவது...?

No comments: