Pages

Saturday 25 June, 2011

வரியை குறைக்க சொல்ல தார்மீக உரிமை மத்திய அரசுக்கு இல்லை....பொதுமக்கள் வரியே வீணாக்க எனக்கு அதிக உரிமையுண்டு-ஜெயலலிதா



டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய்
விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்
ஜெயலலிதா வலியுறுத்தல்

சென்னை, ஜுன்.25-

டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கண்டிக்கத்தக்கது

மத்திய அரசு டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும் மற்றும் மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விட்டதால், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் (கார்) ஆகியவைகளைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கிறது.

ஆனால், டீசல் விலை உயர்வு, ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் தரை வழியாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை ஏற்றத்தினால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரும். இது, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து விடும்.

விலை உயரும்

விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டீசல் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து விடும். மக்களின் வருவாய் ஒரே அளவில் இருக்கும் நிலையில், இது போன்ற டீசல் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வை மக்களால் எப்படி எதிர் கொள்ள இயலும்?

மக்களால் தாங்க இயலாது

அனைத்து தரப்பு மக்களும் எரிபொருளாக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஒட்டு மொத்த விலைவாசி உயர்வு உள்ள இந்த நிலையில், இந்த மண்எண்ணெய் விலை ஏற்றம் ஏழை, எளிய மக்களை மிகவும் வாட்டி வதைக்கும்.

திரும்ப பெற வேண்டும்

எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய்க்கான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

டீசல் மீதான கலால் வரி 2 சதவீதம், கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதம் என சொற்ப அளவில் கலால் மற்றும் சுங்க வரி குறைக்கப்பட்டு, அதைப் போன்று மாநில அரசால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

மத்திய அரசுக்கு உரிமை இல்லை

மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவது மாநில அரசு தான். மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது மதிப்பு கூட்டு வரி மட்டும் தான். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

.....தினத்தந்தி 25.06.2011

*********************
பொது ஜனம்; டீசல் விலையையும், சமையல் கேஸ் விலையையும் உயர்த்தியது அநியாயம் தானேய்யா! ஆனா அதுக்கு இந்த பொம்பளை கொடுத்திருக்கிற அறிக்கை தான்ய்யா இன்னும் அதிகமான அநியாயமா இருக்குது!

பொது ஜனம்; என்ன? அப்படி அறிக்கை அநியாயமா விட்டுடுச்சு!

பொது ஜனம்; நீ மாநில அரசு வாட் வரியை குறைச்சு மக்களை காப்பாத்த வேண்டியது தானேய்யா? இதுக்கு முன்னாடி கலைஞர் அரசு வரியை குறைச்சு மக்களை காப்பாத்தலை....மத்திய அரசோட மல்லு கட்டிகிட்டா இருந்தாரு!

பொது ஜனம்:; அவங்க விலையை ஏத்துவாங்க? அதுக்காக ஜெயலலிதா இங்க வரியை குறைச்சு நஷ்டமடையனுமா? அந்த பொம்பளை  எவ்வளவு வரிப்பணத்து மேல அக்கறையிருந்து சொல்லியிருக்குது! அதை பாராட்டமாட்டேங்கற!


பொது ஜனம்; தூ.....ஏன் ? ஜெயலலிதா 216 கோடி ரூபா சமச்சீர் கல்வியை கிடப்பில போட்டு மக்கள் வரிப்பணைத்தை நாசமாக்கலியா?  இதற்கு தார்மீக உரிமையை எவன்? கொடுத்தது?

உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிய பிறகும், கோர்ட்டை அவமதித்து, பழைய பாடப்புத்தகத்தை அச்சடிப்பதை நிறுத்தாம இன்னும் பணத்தை கொடுத்து அச்சடித்து கொண்டிருக்கிறதே இது வீண் செலவு இல்லையா? இது மக்கள் பணம் இல்லையா?  இதன் தார்மீக உரிமையை எவன் கொடுத்தது?

பொது மக்களின் உயிரை காப்பாத்தறதுக்காக ஏழை மக்களுக்காக 145 கோடி ரூபா செலவில் கலைஞர் அரசால் கட்டப்பட்ட சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, வேண்டுமென்றே பேஷன்டுகளை வெளியே துரத்தி மூடிடுச்சே!  இது அநியாயம் இல்லையா? இதற்கு அனுமதியை எவன் கொடுத்தது?

பொது ஜனம்; இதெல்லாம் மக்கள் வளர்ச்சிப் பணி என்று எந்த முண்டம் சொன்னது!?

பொது ஜனம்; இந்த முண்டம் மட்டும் தான் சொன்னது. இது அறிவாளி முண்டம்! அராஜக முண்டம்!

பொது ஜனம்; அதானே! 645 கோடி ரூபாவில கட்டின தலைமைச்செயலகத்தை மூடி, செம்மொழி நூலகத்தையும் குப்பையில போட்டுதே! திருப்பி பழைய தலைமைச்செயலகத்தையும் , சட்டமன்றத்தையும் மாத்துறதுக்கு செலவு பண்ணுச்சே! இந்த பணமெல்லாம் வீண் இல்லையா! இதெல்லாம் மக்கள் பணத்தை வீணடிக்கிற செயல் இல்லையா! இதற்கு எவன் தார்மீக உரிமையை இந்த பொம்பளைக்கு கொடுத்தது.?

மாநில அரசு மத்திய அரசின் மான்யத்தில் இயங்குகிறது என்பது இந்த பொம்பளைக்கு தெரியாதா?  இல்லை இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்பது இந்த பொம்பளையோட நினைப்பா?

பொது ஜனம்; என்னப்பா ஏழை மக்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து, அவர்களுக்காகவே தன் வாழ்க்கையையும் முதலமைச்சர் சம்பளத்தையும் தியாகம் செஞ்சது!  அதுக்கு சம்பளமா 1 ரூபா தான் வாங்குச்சு! எவ்வளவு கரிசனத்தோடு அது அறிக்கை விட்டிருக்குது! இந்த பொம்பளையை இப்படி போட்டுத் தாக்குறீங்களே!

பொது ஜனம்; ஆமாம்! அந்த பொம்பளை முதலமைச்சர் சம்பளத்தை தியாகம் பண்ணி 1991 க்கு முன்னாடி இரண்டு கோடியா இருந்த சொத்தை எவ்வளவு? சிக்கனமா 1991-1996 க்குள்ளேயே 5 வருஷத்திலே 66 கொடியே 65 லட்சமா மாத்திச்சு! இந்த மாதிரி வறுமையில வாழ்ந்து சொத்து சேர்க்கிற யோக்கியதை எவனுக்கு இருக்கு! அதை தப்பா பேசாதப்பா! நாக்கு அழுகிப்போயிடும்!

பொது ஜனம்; இவ்வளவு சிக்கனமா வருமானத்தை ஈட்டின ஜெயலலிதாவுக்கு தமிழ்நாட்டு அரசின் வருவாய் பிரச்சினையை சீர் செய்யத் தெரியாதா? மத்திய அரசு ஏத்தினா என்ன? மாநில வாட் வரியைக் குறைச்சி மக்களைக் காப்பாத்த தெரியாதா? என்ன?  60 ரூபாயை 66 கோடியா மாத்தினவங்களுக்கு இது சாதாரணம்யா? என்னமோ அறிக்கை விட்டு சும்மனாங்காட்டியும் நெஞ்சை நக்கறிங்களே! அப்புறம் நல்லா வருது என் வாயில!

பொது ஜனம்; என்னதுய்யா 60 ரூபா 60  கோடி? சும்மா எதனாச்சும் சொல்லாதே!

பொது ஜனம்; மாதம் ஒரு ரூபா சம்பளம்னா 60 மாசத்துக்கு 60 ரூபா அதை சொல்றான்யா இந்தாளு! 5 வருஷத்துக்கு 60 மாசம்தானே! 5 வருஷத்துலே 60 ரூபா சம்பாதிச்சு 66 கோடியா மாத்தின அப்பாடக்கர் பொம்பளைக்கு இந்த விலைவாசி உயர்வு எல்லாம் எம்மாத்திரம்? இதை மறைச்சு, இது விலைவாசியில இருந்து தப்பிக்கிறதுக்கு முதலைக்கண்ணீர் விடுதேன்னு சொல்றான்!

பொது ஜனம்; ஆமா! இதை வைச்சே இது பஸ் கட்டணத்தை எல்லாம் ஏத்திடும்! விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம் என்று சொல்லிடும். இது வரியை மானாவாரியா வீணாக்கும் மக்களுக்காக வரியைக் குறைன்னா குறைக்காது! பதிலுக்கு "வள்" "வள்" னு ....குறைக்கும் ஏட்டிக்கு போட்டி போட்டு மக்கள் மண்டையை உருட்டும்! நல்லா வந்து சேர்ந்துக்குதுய்யா!

பொது ஜனம்; அப்ப இந்த பொம்பளைக்கு மட்டும் எவ்வளவு வேண்னாலும் மக்களை பணத்தை வீணடிக்கிறதுக்கு இந்திய அரசியலமைப்பு தார்மீக உரிமையை நிறைய வாரி வழங்கியிருக்கிறதுன்னு சொல்லு! அப்படியென்றால் தமிழ்நாடு தனி நாடா? என்னய்யா! இது லூசு அரசியலமைப்பா இருக்கு!

பொது ஜனம்; பாவம்யா மக்கள்! எல்லா கன்றாவிகளையும் அவங்க தாய்யா சுமக்கணும்! இன்னும் முக்காவாசிப்பேறுக்கு குறைந்த பட்ச ஊதியமே இல்லை! எப்படிய்யா வாங்கற சம்பளத்தை வாடகை கொடுத்துகிட்டு ஸ்கூல் பீசுக்காக இந்த பொம்பளையோட அநியாயத்துக்கெல்லாம் போராடிகிட்டு குடும்பத்தை சமாளிக்கப்போறாங்க! நிறைய தற்கொலை தான் நடக்கும் போலிருக்கேய்யா! மக்களை மக்கள் தான்யா காப்பாத்திக்கணும்! போட்டாங்கள்ள அவங்க தான் அனுபவிக்கணும்!



No comments: