Pages

Sunday 26 June, 2011

மம்தா மக்களை மதிக்குது.....ஜெயலலிதா மக்களை மிதிக்குது...




மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் விலை ரூ.16 குறைந்தது
செஸ் வரியை வாபஸ் பெற்றார், மம்தா

கொல்கத்தா, ஜுன்.26-
மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் மீதான செஸ் வரியை மம்தா பானர்ஜி வாபஸ் பெற்றுள்ளதால், அங்கு கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.16 குறைந்தது.

ஆதரிக்க மாட்டோம்

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை, கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு எனக்கு பெரிதும் வேதனை அளிக்கிறது. இதற்கு என்னுடைய எதிர்ப்பை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். இதுபோன்ற நடவடிக்கையை எனது கட்சி ஒருபோதும் ஆதரிக்காது.

வரி வாபஸ்

இந்த விலை உயர்வை மத்திய அரசு அறிவித்தவுடன், எனது அரசின் நிதி மந்திரி அமித் மித்ராவுடன் ஆலோசனை நடத்தினேன். அதில், மேற்கு வங்காளத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் மீது வசூலிக்கப்பட்டு வரும் செஸ் வரி, 16 ரூபாயை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்தேன். இந்த முடிவு, உடனடியாக அமலுக்கு வருகிறது. அந்த செஸ் வரியை எனது அரசு வசூலிக்காது.

எனவே, மேற்கு வங்காளத்தில் கியாஸ் விலை உயர்வு, 50 ரூபாய்க்கு பதிலாக 34 ரூபாயாக இருக்கும். இதனால், மாநில மக்களுக்கு சிலிண்டருக்கு 16 ரூபாய் மிச்சம் ஆகிறது. இதன்மூலம் அவர்களின் சுமை குறையும் என்று நம்புகிறேன். இதுதொடர்பான அறிவிக்கை, 27-ந் தேதி வெளியிடப்படும்.

செஸ் வரி வாபஸ் மூலம், அரசுக்கு ரூ.75 கோடி இழப்பு ஏற்படும். இருப்பினும், வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் இந்த இழப்பை சரிக்கட்டி விடுவோம்.

கம்ïயூனிஸ்டுகள் மீது தாக்கு

மேற்கு வங்காளத்தில், கம்ïனிஸ்டுகள் ஆட்சியில் இருந்தபோது, சமையல் கியாஸ் மீதான செஸ் வரியை குறைக்க சொன்னபோது, அவர்கள் குறைக்கவில்லை. அவர்கள் இதை வைத்து அரசியல் செய்யவே விரும்பினர். ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஆனால் எங்களால் அப்படி இருக்க முடியாது.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

...தினத்தந்தி 26.06.2011
*************
பொது ஜனம்; ஆமாய்யா மேற்கு வங்க முதல்வர் மம்தா மக்கள் வேதனையை புரிஞ்சிகிட்டு தன்னுடைய மாநில வரியைக் குறைச்சுகிட்டு கேஸ் விலையை குறைச்சு ஒரளவுக்கு மக்கள் வேதனையை தற்காலிகமா போக்கியிருக்குது. இங்கேயும் ஜெயலலிதான்னு ஒன்னு இருக்குது, குறைக்கவே மாட்டேன்னு ஒரேயடியா குரைக்குது. 



பொது ஜனம்; ஆனா அது மட்டும் மக்கள் வரிப்பணத்தை பாழாக்குது! இது வீணாக்குற பணத்துலை இந்த கேஸ் விலைக்கான, டீசல், மண்ணெண்ணெய்க்கான வரியைக் குறைப்பதுஅவ்வளவு கடினமான விஷயமா?

பொது ஜனம்; அதானே! முதல்ல மக்களுக்கு வேண்டியதை செய்! அப்பறமா இதோட அக்கப்போறை வைச்சுக்க வேண்டியது தானே!


பொது ஜனம்; இந்த நல்லெண்ணம் இருந்தா எப்படிய்யா அக்கப்போர் பண்ணமுடியும்? அதுக்கு எங்க நேரம் இருக்குது.? இது மக்களை துன்பப்படுத்தி வேடிக்கை பார்க்கற கும்பலை சேர்ந்தது.



பொது ஜனம்; இது என்னய்யா விலை ஏத்துனா ஒருபா, இரண்டு ரூபான்னு ஏத்த மாட்டாங்களா? 50,100 ன்னுதான் விலை ஏத்துவாங்களா?


பொது ஜனம்; ஒருபா, இரண்டு ரூபா எல்லாம் செல்லாத நோட்டா ஆக்கிட்டாங்களா! ஆனா தொழிலாளர்களோட வருமானம் மட்டும் 5 வருஷம் பத்து வருஷம்னு அப்படியே ஒரே மாதிரி இருக்கும். இன்னும் பல பேர் மாத வருமானம் ரூபா 600 லதான் காலத்தை ஒட்டறாங்க! 

பொது ஜனம்; அவங்க யாரும் வெளியில வந்து போராட மாட்டாங்க! போராடுறவுங்க இப்ப 40000, 50000 சம்பளக்காரங்க மட்டும் தான்!


பொது ஜனம்; இந்த அன்றாடக் காய்ச்சிகளுக்காவது மாநில வரியைக்குறைக்கணும்!.


பொது ஜனம்; இதுக்கு முன்னாடி கலைஞர் கூட இரண்டு முறை குறைத்து இருக்காரேய்யா! இப்ப இவ்வளவு விலை உயர்வு கேஸ் சிலிண்டருக்கு உயர்த்தியிருக்காங்க! அதுவும் பலருக்கு இலவச கேஸ் அடுப்பு வேற கொடுத்து இருக்காங்க! அவங்களுக்கு மண்ணெண்ணையையும் கேன்சல் ஆயிட்டு இருக்கும்! இதெல்லாம் இதுக்கு தெரியுமா இல்லையா!?


பொது ஜனம்; இது சமையலறைக்குத்தான் போகலை, ஏழைங்க வீட்டுல எப்படி? அடுப்பெறியும் என்பது கூடவா தெரியாது!. 


பொது ஜனம்; இலவச அரிசி கொடுத்துட்டு பொங்கி துன்றதுக்கான கேஸ் சிலிண்டரை வாங்கிறதுக்கு கால் வாசி வருமானத்தை காலி பன்ற மாதிரி விலை இருந்தா எப்படிய்யா சமாளிப்பாங்க!? 


பொது ஜனம்; தாலிக்கு தங்கம் தரும்பொழுது வருமான வரம்பை ரூபாய் 2000 ம்னு குறிப்பிட்டு ஏதோ வேண்டா வெறுப்பா கொடுத்துட்டு இருக்குதே! அப்ப  இதுக்கு தெரியவேணாமா?  மக்களோட வருமானம் என்னென்னு!?


பொது ஜனம்; அப்ப எப்படி? ஆடு மாடெல்லாம் தரப்போகுது!?  லேப்டாப், பேன், மிக்சி, கிரைண்டர், மினரல் வாட்டர் வேற தறேன்னு சொல்லியிருக்குது! எப்படி கொடுக்கும்!? 

பொது ஜனம்; அதுல தானேய்யா இதுங்களுக்கு ஒரு "கட்டிங்" வரும்! இதுல என்னத்தை வரும்?, அரசாங்கத்துக்கு வேற வருவாய் இழப்பு!


பொது ஜனம்; பணம் ஒரு பொருட்டே இல்லைன்னு உயர்நீதிமன்றத்தில சம்ச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களை குப்பையில போடறத்துக்கு சொல்லுச்சே! ஜெயலலிதா அரசு! ஏன்? இந்த மதிப்புக் கூட்டு வரியை குறைச்சு பணம் ஒரு பொருட்டே இல்லைன்னு நிருபிக்கலாமே!


பொது ஜனம்; அது தன்னோடத் திருட்டுகோட்டுத் தனத்துக்காக கோர்ட்டுல தெரிவிச்சது.  அது என்னைக்கு பேசின மாதிரி நடந்து இருக்குது.!

பொது ஜனம்; முதல்ல பசங்க படிக்கிற ஸ்கூலுக்கு மினரல் வாட்டரை சப்ளை பண்ண சொல்லு! இப்ப இருக்கிற தண்ணீர் பற்றாக்குறைக்கு எல்லோருக்குமே  வாட்டர் சப்ளை பண்ணனும்!. அப்புறமா மினரல் வாட்டர் சப்ளை பண்ணலாம்! 


பொது ஜனம்;அதெல்லாம் இது பண்ணுமா? எனபது சந்தேகமே! சும்மா கண்துடைப்புக்கு அதிமுக ஆளுங்களுக்கு தந்துவிட்டு மத்தவங்களுக்கு டாட்டா காட்டிடும்!


பொது ஜனம்; மத்த மாநிலங்களை பாத்தாவது இது திருந்தாதா? 


பொது ஜனம்; மேற்கு வங்க மம்தா பானர்ஜி மக்களை மதிக்குது அதனால தான் ஒவ்வொரு அரசு அலுவலகத்துக்கும் நடந்து சென்று ஆய்வு நடத்துது. பந்தா பண்ணாம இருக்குது!.  இது (ஜெயலலிதா) மக்களை காலில போட்டு மிதிக்குது. வீம்புக்குன்னா மக்கள் நலத்திட்டங்களை முடக்குது.   இதுக்கும் அதுக்கும் உள்ள வித்தியாசம் அது தான். 



பொது ஜனம்; இது எதிர்க்கட்சியா இருந்து என்ன? பண்ணுச்சு கொடைக்கானலிலே ரெஸ்ட் எடுத்துகிட்டு இருந்தது.  அது பன்றதை தான் பண்ணிகிட்டு இருக்கும்!

No comments: