Pages

Thursday 30 June, 2011

திருடர்கள்! அமைத்த விசாரணை கமிஷன்!



புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக
திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர்
கருணாநிதி அறிக்கை



சென்னை, ஜுன்.30-

புதிய தலைமைச் செயலகத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்காக திட்டமிட்டு விசாரணை கமிஷன் அமைத்துள்ளனர் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய தலைமைச் செயலகம்

"புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து எழுந்துள்ள புகார்கள் பற்றி விசாரிப்பதற்காக நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது'' என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது. புதிய தலைமைச் செயலகக் கட்டுமானம் குறித்து இதுவரை யாரும் புகார்கள் கொடுத்ததாக எந்தச் செய்தியும் ஏடுகளிலே வரவில்லை. தமிழக அரசினரே தங்களுக்குத் தாங்களே புகார் வந்ததாக செயற்கையாகக் கூறிக் கொண்டு, அந்தப் புகார்களை விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள அந்த புதிய தலைமைச் செயலகத்தில் வந்து குடிபுகாமல் இருப்பதற்காக - தமிழக அரசின் சார்பில் கட்டப்பட்ட அந்த மாளிகையைப் பயன்படுத்தாமல் இருப்பதால் தன்னை பொதுமக்கள் இழித்துரைக்கக் கூடும் என்பதை நன்குணர்ந்த ஜெயலலிதா; அந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் திட்டமிட்டு இப்படியொரு விசாரணை கமிஷனை அமைத்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே உணர்வார்கள்.

முதல்-அமைச்சர் தங்கும் அறை

விசாரணைக்கான வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் - கட்டுமானப் பணியை முடிக்கத் தேவையில்லாத கால தாமதம் - கட்டுமானத்தின் போது பல முறைகேடுகள் - தேவையில்லாத செலவினங்கள் என்றெல்லாம் இட்டுக்கட்டி கூறப்பட்டுள்ளன. தேவையில்லாத செலவினங்கள் என்று விசாரணையாம்!

முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்குச் சென்று ஒரு நாள் பிரதமரை மரியாதைக்காக சந்திக்கச் சென்றார் என்பதற்காக முதல்- அமைச்சர் தங்கும் அறையே மாற்றம் செய்யப்பட்டது, சாலையே புதிதாக போடப்பட்டது; இதற்காக தனியாகச் செலவழிக்கப்பட்டது எவ்வளவு?

தி.மு.கழக ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்த மறுத்து; மீண்டும் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு, அங்கே சட்டமன்றப் பேரவையை உருவாக்குவதற்காக செய்யப்பட்ட செலவு எவ்வளவு? பழைய தலைமைச் செயலகத்திலேயே தொடர்ந்து செயல்படுவதற்காக செய்யப்பட்ட செலவுகள் எவ்வளவு? சாதாரண பயணிகள் செல்லும் விமானத்தைப் பயன்படுத்தாமல் தனியார் விமானத்தை முதல்-அமைச்சர் கையாளுவதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு? இந்த வீண் செலவுகளைப் பற்றியெல்லாம் விசாரணைகள் வேண்டாமா?

இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

...தினத்தந்தி 30.06.2011

*********************

பொது ஜனம்; ஜெயலலிதாவின் ஊழலுக்கு துணை போன "கேடி"யரசன் எப்படி? "நீதியரசரா" மாறி இந்த விஷயத்தை விசாரிக்க முடியும். 


பொது ஜனம்; இது கேசுக்கூடவே தங்கியிருக்குதே! இந்த தங்கமான "தங்கு" ராஜா! இது முறைகேடாயிற்றே! 


பொது ஜனம்; குத்தவாளிகளை நீதிபதி தனியா பார்க்குறதே தப்பு! அவர்களோட சேர்ந்து வேறே தங்கியிருக்குது! இதுக்கு பேசாம கேடியாவே இருந்திருக்கலாம்! எதுக்கு மக்களின் கடைசி நம்பிக்கையான இந்த புனிதமான "நீதிபதி" பதவியை தேர்ந்தெடுக்கணும்! பிழைக்கறதுக்கு தொழிலா இல்லை!


பொது ஜனம்; இந்தக் "கேடி"க்கு இந்த "லேடி" துணைக் கேக்குதா!


பொது ஜனம்; இது மாதிரி குத்தவாளிங்க கூட தங்கினதுனாலே இதுக்கு "தங்க"ராஜ் என்று பெயர் வந்திருக்கும்!

பொது ஜனம்; இந்த ஆளு எல்லாம் சுப்ரிம் கோர்ட்டுக்கு ஜட்ஜா போயிருந்தா என்ன ஆகியிருக்கும்! கீழ் கோர்ட்டிலேயே எல்லாத்தையும் முடிச்சிக்க வேண்டியது தான்! மேல் முறையீட்டுக்கெல்லாம் யாரும் போகமாட்டாங்க!


பொது ஜனம்; நீதிமன்றத்துல வழக்குல நீதிபதி  சார்பு நிலை கொண்டிருந்தாலே, அதாவது வழக்குக்கு சம்பந்தப்பட்டவரான வாதி, பிரதிவாதி இரண்டு பேருல யாருக்காவது உறவினராக!, நண்பராக! இருந்தது தெரிந்ததுன்னாலே அந்த வழக்கை விசாரிக்கிற நீதிபதி தானாகவே  விலகிடுவாங்களே! நீதிமன்ற வழக்கமாயிற்றே!


பொது ஜனம்; குற்றவாளியே குற்றத்தை விசாரிக்கிற முறை தான் ஜெயலலிதா பின்பற்றுவது.  திருடனே திருட்டை விசாரிப்பது  கொலைகாரனே கொலையைப் பற்றி விசாரிப்பது எல்லாம் ஜெயலலிதாவின் பாணி. ஏன்னா ஜெயலலிதாவே டான்சி நிலைத்தை திருடிய திருட்டு ஆள் தான் குற்றத்துக்கு குற்றம் மேட்சாயிடும்.


பொது ஜனம்; இது நன்றி மறவாமையப்பா! ஜெயலலிதாவை டான்சிலேயிருந்து விடுவிச்சதுக்கு நன்றி மறக்காம இந்த பொம்பளை செஞ்சுது! இப்ப விசாரிக்கப்போறதுக்கும் சேர்த்து நன்றி மறக்காம இந்த பொம்பளை கவனிக்கவேண்டிய விதத்துல கவனிச்சிடும்! அதுல மட்டும் தன் கெட்டிக்காரத்தனைத்தை பயன்படுத்தும்! வேற ஒன்னுத்துக்கும் பயன்படுத்தாது! இருந்தா தானே!


 பொது ஜனம்; செலவீனங்கள் குறைத்து, ஆடம்பரமில்லாமல் இந்த அராஜக அதிமுக அரசு செயல்படும் என்று இந்த "அராஜக பொம்பளை" பேட்டி கொடுத்துதே! இதுவே எக்கச்சக்கமா செலவு பண்ணுதே! தனி விமானம்! தனி ரோடு! கலக்குது போ!


பொது ஜனம்; இந்தியப் பிரதமர் கூட இந்தளவுக்கு பயன்படுத்த மாட்டார் போலிருக்குதே!


பொது ஜனம்; இதுக்குப் பெயர் தான் முள்ளை மூள்ளால் எடுத்தல் டெக்னிக்! குற்றவாளியை வைத்தே குற்றவாளியை வைத்தே கண்டுபிடிப்பது!........................? இதை இப்ப அரசியல் சட்டத்துல சேர்த்திருக்காங்க!


பொது ஜனம்; ஓ அப்படியா! மொத்தத்தில இது திருடர்கள் கூட்டமைப்பு அமைத்த விசாரணைக் கமிஷன்!

No comments: